Categories: சமூகம்

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடக்க விருப்பதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் 1

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து வரும் 31.01.2020 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை
நடத்தவுள்ளது.

இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று
1000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் சுயவிவரம் அடங்கிய கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்