சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த “எருமசாணி” விஜய்.! இதோ கிரஹபிரவேச வீடியோ.!

வெளியிட்டது

பிரபல யூடியூபராக இருக்கும் ‘எருமசாணி’ விஜய் தற்போது புதிதாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அதன் கிரகப்பிரவேச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அதே ஏரியாவில் ஒரு காலத்தில் ஓட்டு வீட்டில் குடியிருந்தோம், இத்தனை வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாடி அடுக்கு மாடி வீடு கட்டி இருப்பதாக பெருமிதம் தெரிவித்திருக்கிறார் விஜய். யூடியூபில் “எருமசாணி” என்கிற சேனலை நடத்தியதன் மூலமாக பிரபலமானவர் விஜய். கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு சிறு விஷயங்களை தனது தோழி ஹரிஜாவுடன் இணைந்து வீடியோவாக வெளியிட்டு பிரபலமானார். இவரின் வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்த "எருமசாணி" விஜய்.! இதோ கிரஹபிரவேச வீடியோ.! 1
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவர்களின் வீடியோ பிரபலமானதற்கு காரணம் காதலன் காதலிக்கு இடையில் நடக்கும் குறும்புகள், கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சிறு சிறு உரசல்கள், பரிதாபமான கணவன் – கோபப்படும் மனைவி என்ன பல நல்ல கன்டென்டுகளை கொடுத்து வந்தனர். குறிப்பாக ஹரிஜா சொல்லும்”போடா, எரும சாணி, கிறுக்குப் பயலே” என்ற வார்த்தை மிகப் பிரபலமாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் விஜயும் ஹரிஜாவும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் யூடியூப்பில் வீடியோ வெளியிடுவது குறைந்தது. பிறகு விஜய் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார் அருள் நிதியை வைத்து டி ப்ளாக் என்ற படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியான சில மாதங்களில் தனது காதலி நட்சத்திராவுடன் திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில் தற்போது விஜய் சொந்தமாக வீடு கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் இதே தெருவில் தாங்கள் ஓட்டு வீட்டில் குடியிருந்ததாகவும் தற்போது அடுக்குமாடி வீடு அதுவும் இரண்டு மாடி என்று பெருமிதத்துடன் கூறுகிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்