சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்தவர்களில் ஒருவர்தான் விஜய். திறமையை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கான அடையாளத்தை தேடி ஓட தொடங்கினார். அப்படி இவருக்கு இவரே கொடுத்த அடையாளம் தான் எருமசானி. வித்தியாசமான பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி இன்று அதில் அசத்தி வருகிறார். யூடியூபில் நிறைய காமெடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.

இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சிறு சிறு வீடியோக்களை இயக்கி வந்த இவர் , நடிகர் அருள்நிதியை வைத்து டி பிளாக் என்ற படத்தினை இயக்கி இருந்தார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை என்றாலும், தொடர்ந்து வெற்றிபெற முயற்சி செய்து வருகிறார். அடுத்தடுத்து கதைகளை எழுதும் பணிகளில் இறங்கி இருக்கிறார் விஜய்.
இவர் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த நிலையில், தற்போது இவர் மனைவி கர்ப்பமாக உள்ளார். அண்மையில் இதனை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அறிவித்து இருந்தார். தற்போது நிறைமாதத்தில் மனைவியுடன் புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.