Categories: சினிமா

காலம் அவனை இந்த மாறி ஆக்கும்ன்னு நினைக்கல..தெறிக்க விடும் Etharkkum Thunithavan Official Trailer | Surya

வெளியிட்டது

சினிமாவை தாண்டி மக்களுக்காக பணி செய்து வருவது சூர்யாவின் சிறப்பு. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் சூர்யா. இவர்கள் வைத்துள்ள “அகரம்” அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை படிக்க வைத்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்வது, மருத்துவ தேவைகளுக்கு உதவுவது என்று அகரம் அறக்கட்டளை மூலம் பல குடும்பங்களை வாழ வைத்து கொண்டுள்ளார் சூர்யாவும் அவரது குடும்பமும். இவருடைய தந்தை நடிகர் சிவகுமார் சினிமா துறையில் நடிப்பை தாண்டிய நல்லொழுக்கத்திற்கு எப்படி பெயர் போனவரோ அதே போல தான் நடிகர் சூர்யாவும். Watch Etharkum Thunindhavan Trailer Below

காலம் அவனை இந்த மாறி ஆக்கும்ன்னு நினைக்கல..தெறிக்க விடும் Etharkkum Thunithavan Official Trailer | Surya 1நடிப்பை தாண்டியும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து நடிகர் என்ற பட்டத்தை தாண்டி நல்ல பெயரை மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்துள்ளார்! இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் ஜெய் பீம்! இந்த படம் OTT-ல் வெளியானாலும் இமாலய வெற்றி பெற்று சூர்யாவுக்கு உலகெங்கும் நல்ல பெயர் எடுத்துக்கொடுத்தது! ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் நின்று அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்துரைத்ததால் மக்களின் மத்தியில் நாளுக்கு நாள் இவருக்கு செல்வாக்கும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது!

தற்போது சூர்யா பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்தது வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இதன் டீஸர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படு மாஸாக உள்ள அந்த ட்ரைலரை நீங்களும் காண..Watch Etharkkum Thunindhavan Trailer Below

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்