ஆதி குணசேகரனை பங்கம் செய்து விட்ட நந்தினி.! பதில் பேச முடியாமல் முழிக்கும் ஆதி குணசேகரன்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நந்தினி ஆதி குணசேகரன் போல் அப்படியே மிமிக்கிரி செய்து காட்டி அதனை வம்பு இழுத்து இருக்கிறார். செம்ம காமெடியாக அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் பலருக்கும் பிடித்தமான சீரியலாக இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தை பிடித்து இருக்கும் இந்த சீரியல், தற்போது அடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆதிரை மற்றும் கரிகாலனின் திருமண காட்சிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கரிகாலன் ஆதி குணசேகரனின் வீட்டிற்கு விருந்து சாப்பிட வந்திருக்கிறார். அப்போதும் பிரச்சனை ஒழிந்த பாடு இல்லை. இதற்கிடையில் ரேணுகாவின் மகள் ஐஸ்வர்யா தான் பெரியப்பா பணத்தில் படிக்க விரும்பவில்லை, அரசு பள்ளியில் படிக்க விரும்புகிறேன் என்று புது பிரச்சினையை கிளப்புகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனை பங்கம் செய்து விட்ட நந்தினி.! பதில் பேச முடியாமல் முழிக்கும் ஆதி குணசேகரன்.! 1
இதற்கிடையில் ரேணுகா ஆதி குணசேகரனின் பேச்சை மீறி தற்போது ஐஸ்வர்யாவை அரசு பள்ளியில் சேர்த்திருக்கிறார். இதற்கிடையில் பட்டமாளின் 40% பங்கு ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றுவதை ஜனனி ஓரளவுக்கு கண்டுபிடித்துவிட்டார். இதை கௌதமிடம் கூறிக் கொண்டிருக்க கௌதம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் பட்டம்மாளின் 40 சதவீத பங்கு ஜீவானந்தத்தின் பெயருக்கு மாறுமா என்பது தெரியவில்லை, இந்த நிலையில் ஆதி குணசேகரனின் ஆடிட்டர் மருமகள் பெயரில் நடத்தி வரும் கம்பெனிகளை ஆதி குணசேகரன் பெயருக்கு மாற்றுமாறு அறிவுரை கூறுகிறார். அதை ஏற்றுக்கொள்ளும் ஆதி குணசேகரன் தற்போது மருமகளை அழைத்து சில படிவத்தில் கையொப்பம் இடுமாறு கூறுகிறார். ஆனால் நந்தினி நான் இப்போது இந்த பத்திரத்தில் கையெழுத்து போட மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ரேணுகா அவரால் எதுவும் செய்ய முடியாது என்று கிண்டலாக கூறுகிறார்.

மேலும் சக்தியிடம் நீயும் கையெழுத்து போட வேண்டாம் என்று ஜனனி கூறுகிறார். இதனால் ஜனனிக்கும் ஆதிகுணசேகரனுக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது கோபமாக ஆதி குணசேகரன் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் நந்தினி ஆதி குணசேகரன் பேசும் வசனம் போல, “இந்தாம்மா ஏய், நீங்கள் இனிமேல் ஆதி குணசேகரனின் வேறு முகத்தை பார்ப்பீங்க” அதானே மாமா சொல்லப்போறீங்க? என்று ஆதிகுணசேகரனை கிண்டலடித்து மிமிக்ரி செய்து பேசிக்கொண்டிருக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.! நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்