எதிர்நீச்சல் சீரியலை பார்த்து வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது ஆதிரை மற்றும் கரிகாலன் ஆகியோருக்கு முதலிரவு ஏற்பாடுகளை அவர்களது வீட்டில் உள்ளவர்கள் செய்திருக்கின்றனர். அதில் ஒரு ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஹாட் டாப்பிக் என்னவென்றால் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் முடித்து இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் முதலிரவு நடக்குமா? இல்லையா? என்பது குறித்தது தான் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாப்பிள்ளை விருந்திற்கு வந்த கரிகாலன் ஆதி குணசேகரன் வீட்டிலேயே தங்கியிருக்கிறார். அவர் தனக்கு முதலிரவு நடத்தி வைக்கும்படி ஆதிரையின் அண்ணனை கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ஆதிரையின் அண்ணன் ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள மருமகளிடம் சென்று ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யும்படி கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தங்களால் அதை செய்ய முடியாது என்று நேற்று மறுத்திருந்த மருமகள்கள் இன்று அவருக்கு முதலிரவு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். அறைக்குள் வரும் கரிகாலனிடம் ஆதிரை நீ இப்பொழுது வெளியே செல்ல வேண்டும், வெளியே சென்று யார் என்ன கேட்டாலும் முதலிரவு நல்லபடியாக நடந்ததாக கூற வேண்டும் என்று பொய் சொல்ல சொல்கிறார். இதை கேட்ட கரிகாலன் அழுது கொண்டே வெளியில் செல்கிறார். அடுத்த நாள் காலை அனைவரும் உணவு சாப்பிட அமர்ந்திருக்கின்றனர். அப்போது இந்த விஷயத்தை அவர்களிடம் சொல்ல கரிகாலன் முயற்சிக்கிறார். அந்த நேரம் பார்த்து சரியாக கரிகாலனின் தாயார் ஜான்சிராணி வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. கதை அடுத்தடுத்த திருப்பங்களை எட்டி இருக்கும் நிலையில் தற்போது இந்த புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கரிகாலன் தனக்கும் ஆதிரைக்கும் முதலிரவு நடக்கவில்லை என்கிற உண்மையை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சொல்வானா? இல்லை பயந்து கொண்டு செல்லாமல் விடுவானா? என்பதை தெரியவில்லை. பின்னர் ஆதிரை கரிகாலன் திருமணம் குறித்து வழக்கு தொடுத்தால் இந்த திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வந்து விடும் என்று ஜனனி கூறிக் கொண்டிருக்கிறார். ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கைகளை என்ன செய்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun Tv