சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இத்தனை நாட்களாக தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் தர்ஷினி முதல் முறையாக தனது தாயாருடன் பேசுகிறார். அப்போது அவர் ஜீவானந்தம் பற்றிய உண்மைகளை ஈஸ்வரியிடம் கூறுகிறார். அதேசமயம் சித்தார்த்தை தேடும் பணிகளில் உமையாள் மற்றும் ராமசாமி குடும்பத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது குணசேகரன் தனது மகள் தர்ஷினிக்கும், உமையாள் மகன் சித்தார்த்துக்கும் திருமண ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சித்தார்த் வீட்டிலிருந்து காணாமல் போய்விடுகிறார். அவரை தேடும் பணியில் உமையாள் குடும்பத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, இத்தனை நாட்களாக தனது தந்தை குணசேகரன் கட்டுப்பாட்டில் இருந்து வரும் தர்ஷினி முதல் முறையாக ஈஸ்வரியிடம் பேசுகிறார்.
தற்போது அவர் குணசேகரன் குறித்து சில முக்கிய தகவல்களை ஈஸ்வரியிடம் கூறுகிறார். எனவே கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv