எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பக்கவாதம் வந்தது போல் நடித்துக் கொண்டிருக்கும் குணசேகரன் நடிப்பை ரேணுகாவும் கரிகாலனும் தற்போது சந்தேகப்படத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் தற்போது கதையில் அடுத்த பரபரப்பு எழுந்திருக்கிறது. இதனால் தற்போது கதை மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்நீச்சல் தொடருக்கென்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து கதை நகர்ந்து வருகிறது. தற்போது கதையில் ஆதிகுணசேகரனுக்கு பக்கவாதம் வந்தது போலவும், அவருடைய சொத்துக்களை ஜீவானந்தம் திருடி கொண்டதால் அவருக்கு மாரடைப்பு மற்றும் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய பக்கவாதத்திற்கு மருத்துவம் பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்லும் ஆதி குணசேகரன், சென்னையில் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரியான வளவனை சந்திக்கிறார். அங்கு அவர் ஜீவானந்தத்தின் கதையை முடித்து விடுமாறு கூறுகிறார். அப்போது தனக்கு கைகால் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. பக்கவாதம் எல்லாம் ஒன்றும் கிடையாது. சொத்தை மீட்கும் வரை நான் இதுபோல் நாடகமாடுகிறேன் என்று சொல்லி உண்மைகளை உடைத்து விடுகிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து மீண்டும் வீடு திரும்பிய குணசேகரன், வீட்டில் உள்ள அனைவருடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரேணுகா இதை பார்த்தால் பக்கவாதம் மாதிரி தெரியவில்லை. பக்காவான பக்கவாதமாய் இருக்கு என்கிறார். அதைக் கேட்ட ஞானம் என்ன ஓவரா பேசிகிட்டு இருக்க என்று கேட்க மாரிமுத்து கொஞ்ச நாளாகவே அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்.
மேலும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ஞானத்திடம் கனீர் கனீர் என்று பேசுவேன், ஆனால் இப்போது பேச்சே குழறி குழறி வருகிறது என்று கூற நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் நான் உங்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார். அப்போது குணசேகரன் தனது இரண்டு கைகளையும் வைத்து சொடக்கு எடுக்கிறார். பின்னர் கரிகாலன் வந்தவுடன் கைகளை அப்படியே வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். இதை கரிகாலன் பார்த்துவிட்டது போல் தெரிகிறது. மாமா எனக்கு ஒரு சந்தேகம் என்கிறார். கரிகாலனுக்கும் குணசேகரன் மீது சந்தேகம் வந்துள்ளதாகவே தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV