ஜீவானந்தம் செல்லும் வழியை மறித்த கதிர் மற்றும் வளவன் கேங்.! அடுத்து என்ன நடக்க போகுதோ.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஜீவானந்தம் தனது மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அங்கு ஜீவானந்தத்தை தற்போது கதிர் மற்றும் வளவன் ஆகியோர் இணைந்து வழிமறித்துள்ளனர். மேலும் ஜீவானந்தத்தை தேடி மறுபுறம் ஜனனியும் அங்கு வந்து கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த என்ன நடக்குமோ? என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஜீவானந்தம் யார்.? அவர் எதற்காக குணசேகரனின் சொத்துக்களைத் திருடி ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும்? அவருக்கும் குணசேகரனின் அப்பத்தாவிற்கும் என்ன சம்பந்தம்.? என்பது தெரியாமல் கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவானந்தம் செல்லும் வழியை மறித்த கதிர் மற்றும் வளவன் கேங்.! அடுத்து என்ன நடக்க போகுதோ.! 1

ஜீவானந்தம் யார் என்பதை தேடி ஜனனி ஒருபுறம் அலைந்து கொண்டிருக்கிறார். மறுபுறம் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக குணசேகரன் தனது தம்பி கதிர் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரி வளவன் ஆகியோரை அனுப்பி வைத்திருக்கிறார். மாதம் ஒருமுறை தனது மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக ஜீவானந்தம் கொடைக்கானலில் உள்ள ஒரு மலை கிராமத்திற்கு செல்வது வழக்கமாக இருக்கிறது. அதற்காக அவர் தற்போது அந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அதை சரியாக தெரிந்து கொண்ட வளவன் மற்றும் கதிர் அவர் செல்லும் வழியில் ஜீப்பை நிறுத்தி வழிமறிக்கின்றனர். இதற்கிடையில் ஜனனி ஊட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். அந்த வீட்டின் உரிமையாளர் ஜீவானந்தத்தின் மாமா முறை என்று தன்னை அறிமுகப்படுத்தி ஜனனிக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

தற்போது ஜீவானந்தம் ஊருக்கு வந்துள்ள விஷயத்தை கேள்விப்பட்ட அந்த நபர் ஜனனியை அழைத்துக்கொண்டு ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக சென்று கொண்டிருக்கிறார். மூன்று பேரும் ஒரே திசையில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்