ஈஸ்வரியை லவ் பண்ண பய தான் ஜீவானந்தம்.! குணசேகரனிடம் உளறி தள்ளிய ஈஸ்வரியின் தந்தை.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரியின் தந்தை குணசேகரனிம் வந்து ஈஸ்வரியை கல்லூரி படிக்கும் காலத்தில் காதலித்தவர் தான் இந்த ஜீவானந்தம் என்கிற உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் தற்போது மனம் உடைந்து போய் அமர்ந்திருக்கிறார் குணசேகரன். இதனால் கடுப்பான குணசேகரனின் தாயார் விசாலாட்சி ஈஸ்வரியின் தந்தையைப் பார்த்து எங்கு வந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? விவரம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்களே? என்று சாடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரியை லவ் பண்ண பய தான் ஜீவானந்தம்.! குணசேகரனிடம் உளறி தள்ளிய ஈஸ்வரியின் தந்தை.! 1
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்புடன் நாளுக்கு நாள் வித்தியாசமான கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீவானந்தம் என்கிற கதாபாத்திரம் சீரியலுக்குள் நுழைந்திருக்கிறது. குணசேகரனின் சொத்துக்களை ஜீவானந்தம் அபகரித்திருக்கிறார். ஜீவானந்தம் ஏற்கனவே ஈஸ்வரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரை காதலிப்பதாக கூறி ஈஸ்வரியின் தந்தையிடம் பெண் கேட்டு வந்திருப்பார். அப்போது ஈஸ்வரியின் தந்தை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து குணசேகரனுக்கு ஈஸ்வரியை திருமணம் செய்து வைத்துவிடுவார்.


அந்தப் பையன் தான் ஜீவானந்தம் என்பதை ஈஸ்வரி சில நாட்களுக்கு முன்பு தெரிந்து கொள்வார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரியின் தந்தை குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். அங்கு வந்து அவர் குணசேகரன் மற்றும் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஜீவானந்தம் ஈஸ்வரியை காதலிப்பதாக கூறி பெண் கேட்டு வந்தார் என்கிற உண்மையை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குணசேகரன் வெளியில் வந்து உடைந்து போய் அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்