குணசேகரனை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கும் ஈஸ்வரி.! இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கவே இல்லையே.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் சாருபாலா தேர்தலில் இருந்து விலகிவிட, தான் விலகப்போவதில்லை என்று ஈஸ்வரி அறிவித்திருக்கிறார். எனவே ஈஸ்வரிக்கு எதிராக குணசேகரன் தேர்தலில் நிற்க முடிவெடுத்து இருக்கிறார். ஒரே வீட்டிலிருந்து கணவன் மற்றும் மனைவி இருவரும் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர். ‘எதிர்நீச்சல்’ சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் சாருபாலா தேர்தலில் நிற்க முடிவெடுத்ததால், குணசேகரன் தனது மனைவி ஈஸ்வரியை அவருக்கு எதிராக தேர்தலில் நிற்கவைக்க முடிவெடுத்து இருந்தார். ஈஸ்வரியும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரனை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கும் ஈஸ்வரி.! இந்த ட்விஸ்ட்டை எதிர்பாக்கவே இல்லையே.! 1

“ஈஸ்வரி முதல் முறையாக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார், எனவே அவரே தேர்தலில் நிற்கட்டும்” என்று சொல்லி சாருபாலா மனுவை வாபஸ் பெறுகிறார். இதனால் ஈஸ்வரியையும் மனுவை வாபஸ் செய்ய வைத்து விட்டு, தான் தேர்தலின் என்று அன்னபோஸ்டாக ஜெயிப்பதற்கு குணசேகரன் முடிவெடுக்கிறார். ஆனால் குணசேகரனின் கனவில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக ஈஸ்வரி மனுவை வாபஸ் வாங்கப் போவதில்லை என்று முடிவெடுக்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் குணசேகரன் ஈஸ்வரிக்கு எதிராக களம் இறங்குகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரியையும் குணசேகரனையும் பேட்டி எடுப்பதற்கு பெண் ஒருவர் வந்திருக்கிறார்.


இருவரையும் எதிரெதிரில் அமர வைத்து அந்தப் பெண் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரியிடம் குணசேகரன் தோற்று, அவர் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்