‘எதிர்நீச்சல்’ சீரியலில் என்ட்ரி கொடுத்த புது வில்லன்.! ஜனனிக்கு எதிராக அடுத்த வில்லனா?

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் நீண்ட நாட்களாக காட்டப்படாமல் இருந்து வந்த வில்லனை தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்மில் வலம் வந்து கொண்டிருந்தது ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியல் மாரிமுத்து இறப்புக்குப் பின்னர் பெரிய அளவில் மக்களிடம் எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கதையில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக தற்போது டிஆர்பி ரேட்டிங்கலும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. புதிதாக ஒளிபரப்பான ‘சிங்கப் பெண்ணே’ தொடர் முதலிடத்தை பிடிக்க, இரண்டாவது இடத்தை ‘கயல்’ சீரியல் பெற்றிருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியல் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்து பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'எதிர்நீச்சல்' சீரியலில் என்ட்ரி கொடுத்த புது வில்லன்.! ஜனனிக்கு எதிராக அடுத்த வில்லனா? 1
தற்போது கதைப்படி நடக்க இருக்கும் தேர்தலில் ஈஸ்வரி மற்றும் குணசேகரன் ஆகிய இருவரும் எதிரணியில் போட்டி போடுகின்றனர். ஈஸ்வரி வாபஸ் வாங்கிய பிறகு தேர்தலில் போட்டியிடலாம் என்று குணசேகரன் முடிவெடுத்திருந்த நிலையில், தற்போது அது நடக்காமல் போயிருக்கிறது. ஈஸ்வரிக்கு பின்னால் ஜீவானந்தம் மற்றும் எஸ் கே ஆர் ஆகியோர் பக்கபலமாக இருந்து அவரை ஜெயிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஈஸ்வரியிடம் குணசேகரன் தோற்றுப் போகும் பரபரப்பான எபிசோடுகளை ஒளிபரப்பி மீண்டும் டிஆர்பி ரேட்டிங்கை பிடிக்க இயக்குனர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.


இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இத்தனை நாட்களாக காட்டப்படாத கிருஷ்ணசாமி மெய்யப்பன், நந்தினியின் சமையல் வேலை, ஜனனி சக்தியின் கம்பெனி வேலை போன்றவற்றை இயக்குனர் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்