சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பொட்டிப் படுக்கைகளை எடுத்துக் கொண்டு நேராக அருண் வீட்டிற்கு செல்லும் ஆதிரை, “அங்கு சாருபாலாவிடம் அருணுக்கு விபத்து ஏற்படுத்தியது என் அண்ணன் தான்” என்ற உண்மைகளை போட்டு உடைக்கிறார். அப்போது சாருபாலா “இனிமேல் ஆதிரை இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதிரைக்கும் – அருணுக்கும் திருமணம் நடைபெறுமா? என்கிற எதிர்பார்ப்புடன் பரபரப்பான கட்டங்கள் நடந்து வந்தது. அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து இந்த சீரியல் சாதனை படைத்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரசிகர்களின் விருப்பத்திற்கு மாறாக அருணுக்கு விபத்து ஏற்பட்டது போலவும், அதனால் அவரால் திருமணத்திற்கு வர முடியாமல் கரிகாலனை வலுக்கட்டாயமாக ஆதிரைக்கு திருமணம் செய்து வைத்தது போலவும் காட்டப்பட்டது. தற்போது கதைப்படி அருணுக்கு விபத்து ஏற்படுத்தியது கதிரும் குணசேகரும் தான் என்கிற உண்மையை ஆதிரைக்கு தெரிய வருகிறது. அவர் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு, கரிகாலன் கட்டிய தாலியை அறுத்து எறிந்து விட்டு அருண் வீட்டுக்கு செல்கிறார். அங்கு குணசேகரன், ஞானம் என அனைவரும் அமர்ந்து எஸ்கேஆருடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனது தம்பி கதிரை அடித்துப் போட்டது எஸ்கேஆர் தான் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று குணசேகரன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்போது ஆதிரை, “உங்கள் தம்பிக்கு விபத்து ஏற்படுத்தியது எங்கள் அண்ணன் தான்” என்கிற உண்மையை போட்டு உடைக்கிறார். கரிகாலன் அந்த சமயம் பார்த்து குறிக்கிடுகிறார். இதனால் கோபமான ஆதிரை, அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் விடுகிறார். இதைக் கேட்ட எஸ்கேஆர் ஆதிரையைப் பார்த்து, “நீ உங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும்” என்று கூறுகிறார். ஆனால் சாருபாலாவோ, “இல்லை இனிமேல் ஆதிரை இங்கே தான் இருக்க வேண்டும்” என்று கூற குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV