நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த கதாபாத்திரம்.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலில் இத்தனை நாட்களாக காட்டப்படாமல் இருந்து வந்த கதாபாத்திரம் என்று மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது. இதனால் இனி கதையில் சுவாரஸ்யம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. ஆதிரை தனக்கு கரிகாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி அவர் அருணின் வீட்டிற்க்கே சென்று விடுகிறார். இதனால் கரிகாலனுக்கு தனது மகள் தர்ஷினியை திருமணம் செய்து வைப்பதாக குணசேகரன் உறுதியளித்திருக்கிறார். இதற்கிடையில் கிருஷ்ணசாமி ஐயப்பன், ராமசாமி மெய்யப்பன் என்கிற இரண்டு நபர்கள் ஜனனிக்கு வில்லனாக வந்து கதையில் இணைந்து இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு 'எதிர்நீச்சல்' சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த கதாபாத்திரம்.! ப்ரோமோ இதோ 1
இந்த புது வில்லன்கள் ஜனனிக்கு என்ன தலைவலி கொடுக்கப் போகிறார்கள்? ஜனனி திறக்கப்போகும் புது தொழிற்சாலைக்கு இவர்களால் ஏதேனும் ஆபத்து வருமா? என்கிற எதிர்பார்ப்புடன் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி உடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார். இதை பார்த்து ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோர் சிரிக்கின்றனர். அப்போது ரேணுகா, “இவர் தான் என்னுடைய புருஷன் போட்டோ இருக்கு பாருங்கள் என்று சொல்லி ஜான்சி ராணி குணசேகரன் மீது கேஸ் போட்டாலும் போடுவார்” என்று சொல்லி சிரிக்கிறார். தொடர்ந்து ஜனனியை சந்திக்கும் வகையில் நீங்கள் அந்த ஃபேக்டரியை பூஜை போட்டு வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.


மறுபுறம் ஜனனியின் அத்தை மகளாக இருக்கும் வாசு ஜனனியின் வீட்டிற்கு வருகிறார். இவரது கதாபாத்திரம் நீண்ட நாட்களாக காட்டப்படாமல் இருந்து வந்தது. அதிரடியான கதாபாத்திரமாக இருக்கும் இவர் தற்போது மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரச்சனை ஏதும் வந்துவிடப் போவது என சொல்லி நந்தினி அவரை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கிறார். ஆனால் பிரச்சனை வேண்டும் என்று தான் வந்திருக்கிறேன் என்று சொல்லி வாசு விறு விறு என வீட்டுக்குள் சென்று குணசேகரனை சந்திக்கிறார். வாசுவை பார்த்த குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. நீங்களும் அந்த ப்ரோமாவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்