சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது மருமகள்கள் அனைவரையும் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர் அங்கு குற்றவாளி கூண்டில் மருமகள்கள் ஏற்றப்பட்டு நிற்கவைக்கப்படுகின்றனர். தர்ஷனியை கடத்தியது இந்த நான்கு பேர் தான் என்று சொல்லி குணசேகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகிறார். அப்போது நீதிபதி உடனடியாக முடிவெடுத்து தீர்ப்பு எழுதுகிறார். எனவே மருமகள்களை சிறையில் அடைப்பார்களோ? என்கிற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் மாபெரும் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் மகள் தர்ஷினி காணாமல் போகிறார். அவரை தேடி கண்டுபிடிப்பதற்காக மருமகள் செல்கின்றனர். ஆனால் குணசேகரன் மருமகள்கள் தான் தர்ஷனை ஒளித்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடுவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். இந்த நிலையில் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த மருமகள்கள், அதை போலீசாரிடம் கூற வருகின்றனர். ஆனால் போலீசார் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு குணசேகரனுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். குணசேகரனும் மருமகள்களை கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறுகிறார்.
குணசேகரன் கூறிய குற்றச்சாட்டுகளை ஏற்று தற்போது மருமகள்கள் மற்றும் ஜீவானந்தத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருக்கின்றனர். அங்கு குணசேகரன் தரப்பு வழக்கறிஞர் மருமகள்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வாதிடுகிறார். இந்த வாதத்தை ஏற்கும் நீதிபதி தீர்ப்பை எழுதுகிறார். இதனால் என்ன நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv