சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது விசாரணைக்கு அழைத்துச் சென்ற நந்தினியை காவல்துறையினர் அடித்து துவைக்கின்றனர். இதனால் நடக்க முடியாமல் நடந்துவரும் நந்தினியை பார்க்கும் கதிர், ஓடிச்சென்று அவரைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷினி காணாமல் போன விஷயத்தில் தற்போது மருமகள் நான்கு பேரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. நீதிபதி இரண்டு நாட்களில் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதை எடுத்து அவர்கள் தற்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். அப்போது நந்தினி மற்றும் ரேணுகா இதுவரையும் அழைத்து போலீசார் விசாரணை என்கிற பெயரில் அடித்து துவைக்கின்றனர். பலத்த காயங்களுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருக்கிறார் நந்தினி.
அப்போது அவர்களை தேடி அங்கு வந்த கதிர் மற்றும் ஞானம் இருவரும் நந்தினியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். உடனடியாக கதிர் ஓடிச் சென்று நந்தினி கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வருகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV