“உங்க பொண்ணு ஸ்கூலுக்கு படிக்க போகுதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா?” உளறி கொட்டிய கரிகாலன்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினி கராத்தே வகுப்பிற்கு செல்லும் விஷயத்தை தற்போது கரிகாலன் ஆதி குணசேகரன் முன்பு போட்டு உடைக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் ஆதி குணசேகரனின் தங்கை ஆதிரை, அவருடைய எதிரியின் தம்பியை விரும்புவதை தெரிந்து கொள்கிறார். இதனால் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்து வைத்த முடிவெடுத்தார். இவர்களது திருமணம் நடுரோட்டில் நடைபெறுகிறது. ஆனால் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்லி ஆதிரை வீட்டிலிருந்து வெளியேறி காதலித்தவரின் வீட்டிற்க்கே சென்று விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"உங்க பொண்ணு ஸ்கூலுக்கு படிக்க போகுதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா?" உளறி கொட்டிய கரிகாலன்.! 1
இதனால் கரிகாலன் தனக்கு நீதி வேண்டும் என்று சொல்லி குணசேகரனிடம் சண்டை போடுகிறார். அப்போது குணசேகரன் தனது மகள் தர்ஷினியை திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால் தர்ஷினி பள்ளி படித்துக் கொண்டிருப்பதால் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக கரிகாலனுக்கு ஆதிகுணசேகரன் வாக்கு கொடுக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க, ப்ரோமோவில் கரிகாலனின் தாயார் ஜான்சி ராணி, “தான் வேண்டுமானால் உன் பையை எடுத்துக் கொண்டு வரவா?” என்று கேட்கிறார். பின்னர் கரிகாலன், ஆதி குணசேகரனிடம், “உங்கள் மகள் என்ன படிக்கவா போகிறார்? அவர் அடிக்க தான் போகிறார்” என்று சொல்லி உண்மைகளை போட்டு உடைக்கிறார்.


தர்ஷினி பள்ளியில் ஆதி குணசேகரனுக்கு தெரியாமல் கராத்தே பயின்று வருகிறார். இந்த விஷயம் இத்தனை நாட்களாக ஆதி குணசேகரனுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கரிகாலன் உண்மைகளை உளறுகிறார். இதனால் அடுத்த என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்