சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷினியை காணாமல் தேடி அலைந்து விட்டு வீட்டிற்கு வரும் ஈஸ்வரியை விசாலாட்சி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஈஸ்வரி விசாலாட்சி மேல் பொருட்களை தூக்கி எறிந்து, “பைத்தியக்காரி மாதிரி பேசிக் கொண்டிருக்கிறாய்” என்று திட்டி தீர்க்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது ஈஸ்வர்யின் மகளாக இருக்கும் தர்ஷினியை கரிகாலனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க குணசேகரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்கிடையில் தர்ஷினியை யாரோ ஆள் வைத்து காரில் கடத்தி செல்கின்றனர். தனது மகளை காணாமல் தேடி தெரிந்து கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. இதற்கிடையில் வீட்டிற்கு வரும் ஈஸ்வரியிடம் விசாலாட்சி மிக மோசமான வார்த்தைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் கோபமான ஈஸ்வரி விசாலாட்சி மீது தண்ணீர் இருக்கும் சொம்பை விசிறி அடிக்கிறார்.
பின்னர், “நானே என் மகளை காணாமல் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். நீ பைத்தியக்காரி மாதிரி பேசிக் கொண்டிருக்கிறாயா?” என்று சொல்லி விசாலாட்சியை வெளுத்து வாங்குகிறார். அதன்பின்னர் சக்தி, கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியை அடித்து துவைக்கிறார் தர்ஷினி காணாமல் போனதற்கு இவர்கள் தான் காரணம் என்று சக்தி அவர்கள் இருவரையும் அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது போலீசார் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv