‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை ரவுடிகள் சிலர் கடத்திச் சென்று இருக்கும் நிலையில், போலீசிடமிருந்து ஜனனிக்கு போன் கால் ஒன்று வருகிறது. இதனால் ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி, சக்தி என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் தனது மகள் தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆனால் அந்த சமயம் பார்த்து தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்து விடுகின்றனர். கடத்தியது யார்? தர்ஷினி எங்கே இருக்கிறார்? என்பது எதுவுமே தெரியாமல் ஈஸ்வரி, ஜனனி, நந்தினி, ரேணுகா, சக்தி ஆகியோர் தர்ஷினியைத் தேடி காரில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி வைத்திருக்கும் நிலையில், அவர்களிடம் தன்னை அவிழ்த்து விடுமாறு தர்ஷினி கேட்டுக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பெண்ணின் சடலம் ஒன்று காட்டுப் பகுதியில் கிடைக்கிறது. அப்போது போலீசார் ஜனனிக்கு போன் செய்து அந்த தகவலை கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV