‘எதிர்நீச்சல்’ சீரியலில் இருந்து விலகிய நடிகை..! இனி இவருக்கு பதில் இவர்..! யாருன்னு பாருங்க..!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் முக்கிய நடிகை ஒருவர் மாற்றப்பட்டிருக்கும் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகை இன்றைய எபிசோடு முதல் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தற்போது தகவல் கசிந்து இருக்கிறது. சன் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் சின்ன திரையில் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். தற்போது இந்த சீரியலின் கதைப்படி கரிகாலன் தர்ஷினி திருமணம் நடக்குமா? நந்தினியை கதிர் புரிந்து கொண்டு அவருடன் இணைவாரா? தேர்தலில் ஆதி குணசேகரன் அல்லது ஈஸ்வரி இருவரில் யார் ஜெயிப்பார்கள்? என்கிற பரபரப்புடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது.

'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து விலகிய நடிகை..! இனி இவருக்கு பதில் இவர்..! யாருன்னு பாருங்க..! 1
இது மட்டுமில்லாமல் ஜனனியின் தந்தையான நாச்சியப்பன் குடும்பத்தை இத்தனை நாட்களாக காட்டாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களின் வருகையும் கதைக்கு கூடுதல் வலு சேர்த்து உள்ளது. அவர்களும் இனி ஜனனிக்கு எதிராக வில்லத்தனங்களை செய்ய தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனனியின் தங்கை கதாபாத்திரத்தில் இதுவரை வி.ஜே தாரா என்பவர் நடித்து வந்தார். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்தியாராகம்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் சில மாதங்களாக காட்டப்படாமலேயே இருந்து வந்தது. அவருக்கு திருமணம் நடப்பது போன்ற காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பான நிலையில் திடீரென அந்த கதாபாத்திரத்தை காட்டாமலேயே இருந்து வந்தனர்.


இந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகி இருப்பதால், அவருக்குப் பதிலாக நடிகை ஸ்வேதா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆனந்த ராகம்’ சீரியலில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து அசத்தி வருகிறார். இனி இவர் தான் ஜனனிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் நடிகை ஸ்வேதாவிற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்