“ஹே சும்மா கத்தாம வீட்டை விட்டு வெளிய போ” ஜான்சி ராணியை அடித்து துரத்தும் ஜனனி

வெளியிட்டது

எதிர்நீச்சல் தொடரின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆதி குணசேகரன் மற்றும் ரேணுகா இடையே இன்னும் சண்டை நீடித்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வரும் ஜான்சி ராணியை ஜனனி வீட்டை விட்டு வெளியே போ என்று திட்டுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை செய்து வருகிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல். தமிழ் சின்னத்திரையிலேயே 11.16 டிஆர்பி ரேட்டிங் பெற்று கடந்த வாரம் டாப் ஹிட் தொடர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது இந்த சீரியல். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்க, நடிகர்கள் மாரிமுத்து, விபுராமன், கமலேஷ், சபரி பிரசாந்த், நடிகைகள் கனிகா, மதுமிதா, தேவதர்ஷினி, ஹரிப்ரியா, சத்யப்பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தற்போது கதைப் படி ரேணுகா மற்றும் ஞானத்தின் மகளாக இருக்கும் ஐஸ்வர்யா பருவம் எய்தியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஹே சும்மா கத்தாம வீட்டை விட்டு வெளிய போ" ஜான்சி ராணியை அடித்து துரத்தும் ஜனனி 1

ஆனால் ஐஸ்வர்யாவோ வீட்டில் நடக்கும் சண்டைகள் காரணமாக தான் வயதுக்கு வந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமலே இருந்து வருகிறார். மூன்று நாட்கள் ஆகியும் வீட்டில் இதுவரை யாருக்கும் எந்த விஷயமும் தெரியாமல் இருந்து வந்தது. ஐஸ்வர்யாவின் ஆசிரியை நேரடியாக வீட்டிற்கு வந்து இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் பேசுகிறார். பின்னர் ஆதி குணசேகரன் ரேணுகாவிடம் முறைப்படி ஐஸ்வர்யாவிற்கு சடங்கு செய்யுமாறு கூறுகிறார். ஆனால் என் பிள்ளையை ஒரு மூலையில் உட்கார வைத்து மஞ்சள் தண்ணீர் ஊற்றி சடங்கு சுத்த நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லி ரேணுகா ஆதி குணசேகரனிடம் கடுமையாக சண்டை இடுகிறார். இதற்கிடையில் ஆதிரை திருமணம் செய்து கொண்ட கரிகாலன், மாப்பிள்ளை விருந்துக்காக வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு இந்த பிரச்சனையால் விருந்து வைக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இந்த விஷயம் தெரிந்து தற்போது ஜான்சி ராணி நேராக ஆதி குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ரேணுகாவிடம் ஆதி குணசேகரன் உன் பொண்ணிடம் எடுத்துச் சொல்லி, சடங்கு செய்ய ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூற ரேணுகாவோ எவன் சொன்னாலும் நான் இதை செய்ய மாட்டேன் என்று கடுப்பாக கூறுகிறார். மேலும் ஜான்சி ராணி ரேணுகா மற்றும் நந்தினியிடம் நீங்கள் அடக்க ஒடுக்கமாக எங்கள் வீட்டிற்கு வந்தப்பவே தெரியும், நீங்கள் எதோ பெரிதாக பிளான் செய்கிறீர்கள் என்று சண்டை போட, அதற்கு ஜனனி இப்படியான அநாகரிகமாக பேசுவதை நிறுத்திவிட்டு முதலில் இந்த வீட்டிலிருந்து வெளியே போங்கள் என்று சொல்லி ஜான்சிராணியிடம் கத்துகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது..! நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்