சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி, சக்தி உள்ளிட்ட அனைவரும் கிச்சனில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு ஆதி குணசேகரன் உள்ளே என்ட்ரி கொடுக்கிறார் அத்துடன் அந்த ப்ரோமோவை முடித்திருக்கின்றனர். சின்னத்திரையில் அதிக நபர்களால் விரும்பி பார்க்கப்படும் ஒரு தொடராக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஆதி குணசேகரனின் அப்பத்தாவின் 40 சதவீத பங்குகள் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாறியதே தெரியாமல் ஆதி குணசேகரன் தன் பெயருக்கு அந்த சொத்துக்கள் வரப் போவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் ஒரு புறம் ஜனனி தவித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய எபிசோடில் ஆதி குணசேகரன் தன் மகள் தர்ஷினியை தேடி வீட்டிற்கு படிக்க வந்த கவினை வீட்டில் இருந்து விரட்டி அடித்து விட்டார். பின்னர் தர்ஷினி கோபமாக கராத்தே பயின்றுக் கொண்டிருக்கிறார். அதன் பின்னர் கதிரின் மகள் தாரா தன்னுடைய தந்தையை பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கிற்க்கு வந்து அழைக்கிறார். அப்போது பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது. கதிர் நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று சொல்ல கோபப்படும் நந்தினி கதிரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். வீட்டில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகும் ப்ரோமோவில் 40% பங்குகள் எனக்குத்தான் வரவேண்டும் என்று ஆடிட்டரிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அதன் ஸ்டேட்டஸ் குறித்து நாளை தான் தெரிய வரும் என்று ஆடிட்டர் பதில் அளிக்கிறார்.
இது ஒரு புறம் சென்று கொண்டிருக்க மறுபுறம் நந்தினி கதிர் பற்றி அடுப்படியில் அமர்ந்து கொண்டு கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். கலர் கலராக வேஷ்டி கட்டிக் கொண்டு திரிந்தால் இவன் என்ன பெரிய இவனா? இவனின் கை காலை எவனாவது உடைத்தால் நான் மிகுந்த சந்தோஷப்படுவேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கரெக்டாக ஆதி குணசேகரன், ஞானம், கரிகாலன் என அனைவரும் அடுப்பறைக்குள் நுழைகின்றனர். இதனால் சண்டை இன்னும் பெரிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV