மாமா ஐஸ் பெட்டிக்கு சொல்லிடவா? உயிருக்கு போராடும் குணசேகரனிடம் Thug Life செய்யும் கரிகாலன்.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கரிகாலன் Thug Life செய்து கொண்டிருக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அப்பத்தாவின் நாற்பது சதவீத பங்குகள் தனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் இருக்கும் ஆதி குணசேகரனுக்கு அதிர்ச்சி வைத்தியமாக தற்போது சொத்துகள் அனைத்தும் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜீவானந்தம் யார் என்றே தெரியாத நிலையில் அவர் திடீரென உள்ளே புகுந்து அப்பத்தாவின் 40% பங்குகளை ஆட்டையை போட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார் ஆதி குணசேகரன். ஜனனிதான் ஜீவானந்தம் என்கிற ஆளை அனுப்பி இவ்வாறு அப்பத்தாவின் சொத்தை பறித்துக் கொண்டார் என்று ஜனனி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாமா ஐஸ் பெட்டிக்கு சொல்லிடவா? உயிருக்கு போராடும் குணசேகரனிடம் Thug Life செய்யும் கரிகாலன்.! 1
இது ஒரு புறம் இருக்க தனது மனைவி மற்றும் மருமகள்களை அனுப்பி ஜீவானந்தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சொத்துக்களை மீட்டு வருவதற்கும் சதி திட்டம் தீட்டு வருகிறார். ஜீவானந்தத்திற்கு பெண்கள் மீது ஒரு கரிசனம் இருக்கிறது, எனவே அவர்களை அனுப்பி சொத்துக்களை மீட்கலாம் என்று ஆடிட்டர் அறிவுரை கூற, தனது வீட்டு பெண்களை வைத்து ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்களை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்காக சில நாடகங்களையும் அரங்கேற்றி வருகிறார். நேற்று வெளியான எபிசோடில் ஜீவானந்தம் தன்னை சுட்டு விட்டதாகவும் அதனால் தன் தலை வெடித்ததாகவும் சொல்லி நடு இரவில் எழுந்து உட்கார்ந்து ஒப்பாரி பாடலை பாடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஆடிட்டர் வந்து ஏதோ ஆதி குணசேகரனிடம் கூற அவருக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. அவரை கதிர் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்.


தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மருத்துவமனையில் கரிகாலன் ஐஸ்பெட்டிக்கு சொல்லி விடவா என்று காமெடி செய்து கொண்டிருக்கிறார். மேலும் மற்றொருபுறம் ஈஸ்வரி, நந்தினி,, ஜனனி ஆகிய அனைவரும் இணைந்து ஜீவானந்தத்தை நேரில் சென்று பார்த்தால் தான் இவர் எழுந்து உட்காருவார் போல என்று பேசிக் கொண்டிருக்க மூவரும் இணைந்து ஜீவானந்தத்தை சென்று பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர். அத்துடன் அந்த ப்ரோமோ நிறைவடைகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: SUN TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்