குணசேகரனுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் தம்பிகள்.! என்ன ஆச்சு அவருக்கு.?

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் எந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தத்திடம் பேசுவதற்காக கௌதமை அணுகுமாறு தற்போது ஈஸ்வரியை ஐடியா கொடுக்கிறார். ஆனால் நான் கௌதமிடம் இனிமேல் பேசப்போவதில்லை என்று ஜனனி அதிரடி முடிவை எடுக்கிறார். அப்போது ஈஸ்வரி நீ பேசவில்லை என்றால் என்ன நான் பேசுகிறேன் என்று அதிரடியாக கூறுகிறார். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் மாறியும் ஆதி குணசேகரனை படுக்க வைத்து சுற்றி நின்று தம்பிகள் அனைவரும் அழுது கொண்டிருக்கின்றனர். கரிகாலனும் சேர்ந்து அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது ஆதி குணசேகரனின் நாற்பது சதவீத பங்குகள் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. யாருக்கும் தெரியாமல் கணக் கச்சிதமாக இந்த வேலையை நடத்தி முடித்து இருக்கிறார் ஜீவானந்தம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரனுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் தம்பிகள்.! என்ன ஆச்சு அவருக்கு.? 1

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் ஆதி குணசேகரன் வீட்டிற்கு வருகிறார். அப்போது ஆதி குணசேகரனிடம் உங்களுடைய நாற்பது சதவீத பங்குகளில் வீடும் அடங்கி இருக்கிறது. வீடும் உங்கள் கையை விட்டு போகப்போகிறது என்று குண்டை தூக்கிப் போடுகிறார். அதைக் கேட்டு ஆதி குணசேகரன் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விழுகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அவரை கதிர் மற்றும் கரிகாலன் ஆகிய இருவரும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரை தற்போது சுற்றி அமர்ந்து கொண்டு அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள். அப்போது கரிகாலன் நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் உன்னை வண்டியில் வைத்து அழைத்து வருவது போல் ஆகிவிட்டது மாமா என்று அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்து ஆதி குணசேகரனும் தற்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க மற்றொருபுறம் ஜனனி, நந்தினி, ஈஸ்வரி மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி ஜனனியைப் பார்த்து அந்த கௌதமை அழைத்து பேசுமாறு கூறுகிறார். ஆனால் நான் கௌதமிடம் பேசப் போவதில்லை என்ற கூற, நான் பேசுகிறேன் என்று சொல்லி ஈஸ்வரி அதிரடி முடிவை எடுக்கிறார். அதைக் கேட்கும் ஜனனி ஆடிப் போகிறார். தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்