இனிமே ஒரு கையால தான் உன்ன கும்பிட முடியும்.! மீனாட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தும் குணசேகரன்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது பக்கவாதத்தால் வலது கை மற்றும் வலது கால் ஆகியவற்றின் இயக்கங்களை இழந்த குணசேகரன் தற்போது வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார். அவரைப் பார்த்து அவரது தாய் விசாலாட்சி கதறி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்பத்தாவின் 40 சதவீத பங்குகள் தன்னிடமிருந்து ஜீவானந்தம் பெயருக்கு மாற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத அவர் அழுது புலம்பி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சியாக வீட்டின் பங்குகளும் ஜீவானந்தம் பெயருக்கு மாற்றப்பட்டதாக ஆடிட்டர் வந்து கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமே ஒரு கையால தான் உன்ன கும்பிட முடியும்.! மீனாட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தும் குணசேகரன்.! 1

இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஆதி குணசேகரனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அவர் அங்கேயே மயங்கி விழுகிறார். அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அவரது தம்பிகள் ஓடிய நிலையில், அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒரு பக்கம் முழுவதும் செயலிழந்து போய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். வலது கை மற்றும் வலது கால் ஆகியவற்றின் இயக்கங்கள் குணசேகரனுக்கு இனி செயல்படாது என்று மருத்துவர் அதிர்ச்சி தகவலை கூறுகிறார். இந்த தகவலை தெரிந்து கொண்ட ஆதி குணசேகரன் வேதனையில் துடிக்கிறார். தன்னை ஊசி போட்டு கருணை கொலை செய்து விடுமாறு தனது தம்பிகளிடம் அழுது புலம்பி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் டிஸ்டார்ஜ் முடிந்து மீண்டும் வீட்டிற்கு வரும் ஆதி குணசேகரன் பார்த்து அவர்கள் தாய் விசாலாட்சி அழுது துடிக்கிறார்.


மேலும் வீட்டில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி அம்மனின் புகைப்படத்திற்கு முன்பு நின்று ஒரு கையால் தான் கும்பிட முடியும். எனக்கு ஒரு கை விளங்காமல் போய்விட்டது என்று சொல்லி கதறி அழுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் நடிப்பில் மாரிமுத்து நம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறார் என்று சொல்லி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்