மருமகளுக்கு விழுந்த அடுத்த பேரிடி.! அதிர்ச்சியில் உறைந்து போன நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஞானம் புது தொழிலை தொடங்குவதற்காக வீட்டில் இருந்து அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்று கிளம்பிக் கொண்டிருக்கிறார். அவரை குணசேகரனும், அவரது தாயார் விசாலாட்சியும் மிக கேவலமாக நடத்துகின்றனர். விசாலாட்சி ஒரு படி மேலே போய் மாமியாரிடம் பணம் வாங்கி வேலை தொடங்குகிறான் என ஞானத்தை அசிங்கப்படுத்துகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருமகளுக்கு விழுந்த அடுத்த பேரிடி.! அதிர்ச்சியில் உறைந்து போன நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி.! 1

‘எதிர்நீச்சல்’ சீரியலில் இத்தனை நாட்களாக தர்ஷினி – சித்தார்த் திருமண கதைக்களம் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது அது முடிவுக்கு வந்து, ஞானம் புது தொழில் தொடங்கும் கதை ஆரம்பித்திருக்கிறது. இதில் திடீர் திருப்பமாக கரிகாலன் பேச்சை கேட்டுக் கொண்டு ஞானம் புது தொழிலை தொடங்குகிறார். இதனால் அவருக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு வேலைக்கு கிளம்புகின்றனர்.

அப்போது கதிர் விசாலாட்சியிடம் சென்று ஞானத்திற்கு ஆசி வழங்கி அனுப்புமாறு கூற, “மாமியாரிடம் பணம் வாங்கி தொழில் தொடங்கும் இவனுக்கு நான் ஆசி வழங்க வேண்டுமா” என்று கேட்டு அசிங்கப்படுத்துகிறார். அதன் பின்னர் கடைத் திறப்பு விழாவிற்கு வரும் கரிகாலன் இந்த ஐடியாவை கொடுத்ததே நான் தான் எனக் கூற, நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, ஜனனி என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்