சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சக்தி மற்றும் ஜனனி இருவருக்கிடையே தற்போது நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இத்தனை நாட்களாக சண்டை, சண்டை என இருந்த கதையில் தற்போது சிறிது திருப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோலவே கதையை நகர்த்துமாறு ரசிகர்கள் இயக்குனரை கேட்டுக் கொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொய் விருந்து பிரச்சனை, ஞானத்தின் புது தொழில் நஷ்டம் அடைந்தது, தர்ஷினி வீட்டில் இருந்து வெளியேறியது, ஈஸ்வரி குணசேகரனிடம் விவாகரத்து கேட்பது, ஜனனியின் புது வேலைக்கு சென்றது என பல பிரச்சினைகளை ‘எதிர்நீச்சல்’ வரிசையாக சந்தித்து வருகிறது. எப்போதும் பிரச்சினைகளை மட்டுமே சந்தித்து வரும் இந்த சீரியலில் விடிவு காலமே இல்லையா? என்று ரசிகர்கள் புலம்பத் தொடங்கினர். எனவே இயக்குனர் கதையை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் சக்தி மற்றும் ஜனனி இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருப்பது போல காட்சிகளை இயக்குனர் வைத்துள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV