திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! வெளியான புகைப்படம்

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? அவருக்கு என்ன ஆனது? என குழம்பிப் போயிருக்கின்றனர் ரசிகர்கள். மாரிமுத்து மறைவின் சோகத்திலிருந்து இன்னும் மீண்டு வராத ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி தகவலாக இருந்து வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் 500 எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வரும் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக காலமாகியிருந்தார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை.! வெளியான புகைப்படம் 1

ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் மாரடைப்பு வந்துள்ளது. தானே காரை ஓட்டிக் கொண்டு சென்றதில் அவருக்கு மாரடைப்பு இன்னும் அதிகமானதாக மருத்துவர்கள் கூறினர். மாரிமுத்து மறைவுக்கு பின்னர் அந்த இடத்தில் யாரையுமே நிரப்ப முடியாமல் சீரியல் குழுவினர் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாரிமுத்துவுக்கு ஒரு அண்ணன் இருப்பது போலவும் மாரிமுத்து காணாமல் போய்விட்டதால் அவர் அண்ணனை களமிறக்குவது போலவும் கதையை நகர்த்தி வருகின்றனர். இந்த கதைக்களம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நன்றாக சென்று கொண்டிருந்த கதை இப்படி ஆகிவிட்டதே என்று பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இந்த சீரியலில் மூன்றாவது மருமகளாக நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஹரிப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையில் குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்த அவர், “வாழ்க்கை நம்மிடம் விளையாடுகிறது” என்று சொல்லி புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது? தற்போது எப்படி இருக்கிறார்? என்ற ஒரு தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ரசிகர்கள் ஹரிப் பிரியாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மாரிமுத்துவின் இழப்பிலிருந்து இன்னும் மீண்டு வராத எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு இந்த பதிவு மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்