நிரந்தரமாக முடிவுக்கு வந்த அப்பத்தா கதாப்பாத்திரம்.? ப்ரோமோவை வெளியிட்ட சூசக அறிவிப்பு.?

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலில் அப்பத்தா கதையை நிரந்தரமாக இயக்குனர் முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாகவே தெரிகிறது. அதை சூசகமாக அறிவித்து தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மருமகள்கள் அனைவரும் பேசுவது போலவும், அப்பத்தா இனி வந்தாலும் வராவிட்டாலும் நாங்கள் எதிர்நீச்சல் போட தயாராகி விட்டோம் என்றும் பேசுவது போன்ற வீடியோவை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனை நாட்களாக பாசிட்டிவ் கதாபாத்திரமாக இருந்து வந்த அப்பத்தாவின் கதையை முடிப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தரமாக முடிவுக்கு வந்த அப்பத்தா கதாப்பாத்திரம்.? ப்ரோமோவை வெளியிட்ட சூசக அறிவிப்பு.? 1
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. படிக்காத ஆண்களை திருமணம் செய்து கொண்டு வரும் மருமகள்கள் அந்த வீட்டில் எவ்வளவு பிற்போக்குத்தனங்களை அனுபவிக்கிறார்கள்? எவ்வளவு துயரங்களை சந்திக்கிறார்கள்? என்று எடுத்துக்காட்டும் ஒரு கதையாக இருந்து வந்தது. இந்த கதையின் ஆணிவேராக பட்டமாள் என்கிற கதாபாத்திரத்தில் பாம்பே ஞானம் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது அப்பத்தா கார் குண்டுவெடித்து இறந்து விட்டதாக காட்டுப்பட்டு வருகிறது. ஆனால் பலரோ அப்பத்தா இறந்திருக்க மாட்டார். அவரை கௌதம் காப்பாற்றி வைத்திருப்பார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


பலரும் இதுபோல் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் நான்கு மருமகள்களும் இணைந்து பேசுவது போன்ற ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அப்பத்தா இனிமேல் வரமாட்டார், அவர் வரவில்லை என்றாலும் அவர் காட்டிய வழியில் நாங்கள் எதிர்நீச்சல் போடுவோம் என்று சொல்லி மருமகள்கள் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி இருப்பதால் அப்பத்தாவின் கதையை முடித்து விட்டார்களோ? என்கிற அதிர்ச்சி ரசிகர்களுடைய எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்