சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்தான் ‘எதிர்நீச்சல்’ சீரியல். தற்போது இந்த சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தாவின் கொலை வழக்கு விசாரணையில் குணசேகரன் எழுதியதை அப்படியே எழுதி இருப்பது போல இருக்கிறது, இந்த கேஸை சரியாக விசாரித்தது போலவே தெரியவில்லை என நீதிபதி போலீசாரிடம் குறுக்கு விசாரணை செய்கிறார். அப்போது அப்படியெல்லாம் இல்லை மேடம் நாங்கள் சரியாகத்தான் விசாரித்தோம் என்று போலீசார் பதிலளிக்கிறார். அப்போது குறுக்கிடும் ஜனனி, இவர்கள் விசாரிக்கவே இல்லை என்று கோபத்தில் கத்துகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மறுபுறம் வீட்டில் ஈஸ்வரியிடம் நீ வேலைக்குப் போய் தான் தீருவியா? என்று குணசேகரன் கேட்க, ஆமாம் நான் வேலைக்குப் போகத்தான் போகிறேன் என்று ஈஸ்வரி திடமாக பதிலளிக்கிறார். தனது பேச்சை மீறி மருமகள் அனைவரும் செயல்பட தொடங்கியதை நினைத்து ஆதி குணசேகரன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். பின்னர் அறைக்குச் செல்லும் அவருக்கு வக்கீலிடம் இருந்து போன் கால் வருகிறது. அப்போது சக்தியும் ஜனனியும் அப்பத்தாவின் கேஸை மறு விசாரணை செய்ய நீதிபதியிடம் முறையிட்டுள்ள செய்தியை கூறுகிறார். இது ஆதி குணசேகரனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஆதி குணசேகரன் குழம்பிப் போயிருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV