“இன்னொரு தடவ அந்த ஆள் உன்ன தப்பா பேசுனா நடக்குறதே வேற” ஈஸ்வரிக்கு ஆதரவாக மாறிய தர்ஷன்.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரியின் மகன் தர்ஷன் கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு தடவை அந்த ஆள் உன்னை பற்றி ஏதாவது தப்பாக பேசினால் நடப்பதே வேறு என்று ஈஸ்வரியிடம் தர்ஷன் கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் ஈஸ்வரி நெகழ்ச்சியில் கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இன்னொரு தடவ அந்த ஆள் உன்ன தப்பா பேசுனா நடக்குறதே வேற" ஈஸ்வரிக்கு ஆதரவாக மாறிய தர்ஷன்.! 1

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்புடன் நாளுக்கு நாள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தை பார்த்துவிட்டு திரும்பி வந்த ஈஸ்வரியை நடத்தை கெட்டவள் என்றும், அவர் முன் முன் ஒரு காலத்தில் ஜீவானந்தம் பெண் கேட்டு வந்த விஷயத்தையும் தெரிந்து கொண்டு மிகவும் மோசமாக பேசினார் ஆதி குணசேகரன். அதுவும் ஈஸ்வரியின் பிள்ளைகளை வைத்துக் கொண்டே நடத்தை கெட்டவள் என்று தகாத வார்த்தைகளில் பேசினார்.

இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரியின் மகன் தர்ஷன், “இனிமேல் அந்த ஆள் உன்னை பற்றி ஒரு வார்த்தை பேசினால் நடப்பதே வேறு” என்று தாய்க்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார். அதே சமயம் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய குணசேகரன் முடிவெடுத்திருக்கிறார். அப்போது சரியாக அப்பத்தா போலீசுடன் வந்து இறங்குகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்