“நீ மொதல்ல வெளியே போடா” குணசேகரனை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன அப்பத்தா.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் கதிர் இருவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு அப்பத்தா கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. நேற்றைய ப்ரோமோவில் ஈஸ்வரியை விவாகரத்து செய்ய குணசேகரன் முடிவெடுத்து தனது சொந்தக்காரர்களை அழைத்து நடுவீட்டில் வைத்து விவாதம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அப்பத்தா போலீசுடன் வந்து இறங்குகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நீ மொதல்ல வெளியே போடா" குணசேகரனை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன அப்பத்தா.! 1

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அப்பத்தா இங்கு என்ன கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க, ரேணுகா ‘ஈஸ்வரி அக்காவை இவர் விவாகரத்து செய்யப் போகிறாராம்’ என்று கூறுகிறார். அதற்கு இந்த கணக்கை தீர்ப்பதற்கு முன் பல கணக்குகளை தீர்க்க வேண்டியது இருக்கிறது என்று சொல்லி அப்பத்தா குணசேகரனிடம் கூறுகிறார். பின்னர் ஜனனியும் சக்தியும் இனிமேல் இந்த வீட்டில் என்னுடைய நான் தங்குவார்கள் என்று அப்பத்தா கூறுகிறார். அதற்கு குணசேகரன் அவர்கள் இருவரும் இந்த வீட்டில் தங்கினால் நாங்கள் வெளியே போவதா? என்று கேட்கிறார்.

அதற்கு பதில் அளிக்கும் அப்பத்தா அது உன் இஷ்டம் என்று கூறுகிறார். இதனால் அப்பத்தா குணசேகரன், கதிர் ஆகிய இரண்டு பேரையும் வெளியே அனுப்ப திட்டம் தீட்டி விட்டார் என்றே தெரிகிறது. குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறுவாரா? அல்லது என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்