எதிர்நீச்சல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மாரிமுத்துவின் சொந்த குரலில் அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் கலங்கிப் போயிருக்கின்றனர். இந்த எபிசோடுடன் இனி மாரிமுத்து திரையில் தோன்ற போவதில்லை என்கிற அதிர்ச்சிகரமான செய்தியும் கிடைக்கின்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் பலரின் ஃபேவரைட் தொடராக இருந்த எதிர்நீச்சல் சீரியலில், யாரும் எதிர்பாராத விதமாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து காலமாகி இருந்தார். இதன் பின்னர் மாரிமுத்துவிற்கு வேறு ஒருவர் குரல் கொடுத்து வந்தார். ஆனால் அதை பலரும் ஏற்க மறுத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ஒரு புது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கரிகாலன் மாடிக்குச் சென்று ரேணுகா, நந்தினி ஆகியோர் இருக்கும் அறைக்கு வெளியில் நின்று கொண்டிருக்கிறார் .அப்போது வெளியே வரும் ரேணுகா அந்த ஆள் உன்னை வேவு பார்க்க அனுப்பினானா? உன் கண், காது, மூக்கு அனைத்தையும் புடுங்கி விடுவேன் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் கீழே அமர்ந்திருக்கும் குணசேகரன் வழக்கம்போல தனது தாய் விசாலாட்சியை ஏதோ திட்டிக் கொண்டிருக்கிறார். அவரது சொந்த குரலில் கடைசியாக அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் குரல் தெளிவில்லாமல் ஏதோ கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல குரல் கேட்கிறது.
ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்துள்ள கடைசி எபிசோடுகள் இதுதான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாரிமுத்து திரையில் வரும் இன்னும் எத்தனை எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்பது தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV