ஆதிகுணசேகரனை பாக்கணுமா? அப்போ என் கூட வாங்க.! கதிரை அழைத்த மர்ம நபர்.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் மற்றும் ஞானம் இருவரும் ஆதி குணசேகரனை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் சாமியார் ஒருவர் நீங்கள் ஆதி குணசேகரனை பார்க்க வேண்டுமென்றால் என்னுடன் வாருங்கள் என்று கூறுகிறார். இதனால் கதிரும் ஞானமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். யார் என்றே தெரியாத ஒருவர் ஆதி குணசேகரன் பற்றி பேசியதால் இருவரும் அப்படியே உறைந்து போய் நிற்கின்றனர். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதிகுணசேகரனை பாக்கணுமா? அப்போ என் கூட வாங்க.! கதிரை அழைத்த மர்ம நபர்.! 1

ஆதி குணசேகரன் லெட்டர் எழுதி வைத்துவிட்டு சொத்துக்களை தம்பியின் பெயரில் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். அவர் எங்கு சென்றார் என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்துள்ளது. மாரிமுத்து மறைந்த பின் இந்த கதாபாத்திரத்தின் கதையை வேறு போக்குகிற்கு திருப்பி உள்ளனர். ஆதி குணசேகரனுக்கு அண்ணன் இருப்பது போலவும் கதை நகர்ந்து வருகிறது. ஆதி குணசேகரனை கண்டுபிடித்து தருமாறு ஈஸ்வரி ஜீவானந்தமிடம் கேட்க ஜீவானந்தம் தனது மகளை பார்த்துக் கொள்ளுமாறு ஈஸ்வரியுடன் அனுப்பி வைக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அப்பத்தா இந்த குழந்தை யார் என கேட்கிறார்.


அப்போது நந்தினி இது நம் நண்பர் ஒருவரின் குழந்தை தான். நம் அனைவருக்கும் தெரிந்த நண்பர் என்று கூறுகிறார். மேலும் இன்னொரு புறம் கதிரிடம் சாமியார் ஒருவர் வந்து ஆதி குணசேகரனை பார்க்க வேண்டுமா அப்போ என் கூட வா என்று கூப்பிடுகிறார். இதனால் கதிரும் ஞானமும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்