எதிர்நீச்சல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தாலியை கழட்டப் போன நந்தினியை தற்போது விசாலாட்சி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல் சீரியல். மாரிமுத்து மறைவுக்கு பின்னர் இந்த சீரியல் கதை வேறு விதத்தில் நகர்ந்து இருக்கிறது. மாரிமுத்துவை தேடிச்சென்ற தம்பிகள் அவர் கிடைக்காத விரக்தியில் வீடு வந்து சேர்ந்துள்ளனர். இந்த நிலையில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்திற்காக உணவு சமைத்துக் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார் நந்தினி. அப்போது அங்கு வரும் கதிர் அவரை எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவு போடுகிறார். இதனால் முதியவர்கள் இல்லத்தில் இருந்த அந்த பெண்மணி கைநீட்டி காசு வாங்கி இருக்கிறீர்கள், இந்த காசை உடனடியாக திருப்பி கொடுங்கள் என்று சண்டை போடுகிறார். அப்போது உங்களுக்கு காசு தானே வேண்டும் இதோ என் தாலியை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி நந்தினி தாலியை கழட்டி கொடுக்கிறார். அதை பார்த்த விசாலாட்சி குத்துக்கல் மாதிரி உன் புருஷன் இங்கு இருக்கும்பொழுது தாலியை கழட்டுகிறாயா? என்று கேட்க, என்னைப் பொருத்தவரை இது வெறும் செயின் தான் என்று நந்தினி பதிலளிக்கிறார்.
இதனால் கோபமான விசாலாட்சி நந்தினியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV