ஆதி குணசேகரனை கண்டுபிடித்த ஜீவானந்தம்.! கதிருக்கு வந்த போன் கால்.! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஆதி குணசேகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் போன் செய்து பேசுகிறார். மறுபுறம் ஆதி குணசேகரனும் கதிருக்கு போன் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு ஆள் கிடைக்காததால் கதையை வேறு விதத்திற்கு இயக்குனர் நகர்த்தி இருக்கிறார். நடிகர்களின் பலரும் வில்லன்களாக மாறி இருப்பது போல காட்டப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரனை கண்டுபிடித்த ஜீவானந்தம்.! கதிருக்கு வந்த போன் கால்.! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் 1

இது எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இத்தனை நாள் கதிரும், ஆதி குணசேகரன் மட்டுமே வில்லத்தனங்களை செய்து வந்த நிலையில், தற்போது ஞானம், விசாலாட்சி, கரிகாலன் என அனைவரும் வில்லத்தனங்களில் இறங்கி இருக்கின்றனர். இது பார்க்கும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் சீரியல் பார்க்கவே பிடிக்கவில்லை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஆதி குணசேகரனை கண்டுபிடித்து தருமாறு ஈஸ்வரி ஜீவானந்ததிடம் கேட்டிருந்தார். அவரை கண்டுபிடிப்பதற்காக சென்ற ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு போன் செய்து அவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டது என்று கூறுகிறார்.


மறுபுறம் கதிருக்கு போன் செய்த ஆதி குணசேகரன் என்ன நடந்தாலும் இந்த தடவை மிஸ் ஆக்க் கூடாது என்று கூறுகிறார். அப்போது என்ன ஆனாலும் இந்த முறை மிஸ் ஆகாது அண்ணே என்று கதிர் கூறுகிறார் இதனால் அடுத்தடுத்து திருப்பங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும். ! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்