ஆதி குணசேகரன் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு..! எதிர்நீச்சல் குடும்பத்துக்கு கிடைத்த மாஸ் அப்டேட்.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜனனி ஈஸ்வரியிடம் குணசேகரன் ஏற்கனவே கிளம்பிவிட்டார், அவர் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என்கிற தகவலை கூறுகிறார். அந்த ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் விரைவில் ஆதி குணசேகரன் என்ட்ரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி பல லட்சம் மக்களின் மனங்களை வென்ற ஒரு தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக இருந்த மாரிமுத்து காலம் ஆகியிருந்த பிறகு கதையின் போக்கை மாற்றி அமைத்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதி குணசேகரன் கிளம்பி வந்துகிட்டு இருக்காரு..! எதிர்நீச்சல் குடும்பத்துக்கு கிடைத்த மாஸ் அப்டேட்.! 1

தற்போது கதைப்படி ஆதி குணசேகரன் வீட்டிலிருந்து லெட்டர் எழுதி வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறார். அவரைத் தேடி சென்ற தம்பிகளும் அவரை சந்திக்க முடியாமல் வீடு திரும்பினர். ஆனால் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யுமாறும் அங்கு வைத்து அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று தம்பிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் ஆதி குணசேகரன் என்ட்ரி கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதை உறுதி செய்யும் விதமாக நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் ஆதி குணசேகரனை சந்தித்து விட்டதாகவும் அவர் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிற்கு வரலாம் என்றும் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரி, ஜனனியிடம் ஆதி குணசேகரன் பற்றி ஏதாவது தெரிந்ததா என்று கேட்க, ஜனனியும் அவர் கிளம்பிவிட்டார் இந்நேரம் வீட்டிற்கு வந்துவிடுவார் என்று கூறுகிறார். இதனால் எதிர்நீச்சல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். விரைவில் ஆதி குணசேகரன் என்ட்ரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பசுபதியா? வேலராம மூர்த்தியா?, ராதாரவியா? என்று ரசிகர்களின் யூகங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்