ஒன்றாக இணைந்து பார்ட்டி செய்து வார இறுதி நாளை கொண்டாடிய ‘எதிர்நீச்சல்’ நடிகர்கள்..!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்துவரும் நடிகர்கள் தற்போது அனைவரும் இணைந்து ஒன்றாக வார இறுதி நாள் பார்ட்டியை கொண்டாடி இருக்கின்றனர்.

ஒன்றாக இணைந்து பார்ட்டி செய்து வார இறுதி நாளை கொண்டாடிய 'எதிர்நீச்சல்' நடிகர்கள்..! 1

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரை உலகின் டாப்ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது கதைப்படி ஆதி குணசேகரனின் மகள் தர்ஷினி காணாமல் போய்விடுகிறார்.

அவர் ஏன் காணாமல் போனார். அவரை கடத்தியது யார்? என்பது தெரியாமல் வீட்டில் உள்ள அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தர்ஷினியை தேடி காட்டுப்பகுதிக்குள் செல்லும் மருமகள்கள், அவரைக் காப்பாற்றுவதற்கு முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் ரவுடிகளிடம் இருந்து தப்பித்து தற்போது தர்ஷினி வெளியில் செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ.? என்கிற பரபரப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் இணைந்து ஹோட்டலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடி இருக்கின்றனர்.

வேலராமமூர்த்தி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, மதுமிதா, சத்தியபிரியா, காயத்ரி, தர்ஷினி வேடத்தில் நடிக்கும் மோனிஷா என அனைவரும் ஒன்றாக இணைந்து சென்றிருக்கின்றனர்.

மேலும் இவர்களுடன் சக்தி, கதிர், ஞானம், கிருஷ்ணசாமி மெய்யப்பன், ராமசாமி மெய்யப்பன், ஆதிரை ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களும் சென்று இருக்கின்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்