40% பங்குகள் மருமகளுக்கு தரப் போறேன்னு எவன் சொன்னது? மீண்டும் குட்டையை குழப்பும் அப்பத்தா.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவில் தற்போது அப்பத்தா இந்த 40 சதவீத பங்குகள் எந்ம மருமகளுக்கும் இல்லை என்று புது குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார். இதனால் அடுத்த பரபரப்பு எழுந்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்கவே முடியாத அளவிற்கு பரபரப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

40% பங்குகள் மருமகளுக்கு தரப் போறேன்னு எவன் சொன்னது? மீண்டும் குட்டையை குழப்பும் அப்பத்தா.! 1

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆதி குணசேகரன் இந்த கிழவியின் கதையை முடிக்க வேண்டும் என்று ஒரு புறமும் கங்கணம் கட்டிக்கொண்டு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் அப்பத்தா மற்றும் மருமகள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தர்ஷினி இந்த 40 சதவீத பங்குகளை எங்களுக்காக தான் நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறுகிறார்.

அப்போது குறிக்கிட்டு பேசும் அப்பத்தா, “இந்த 40 சதவீத பங்குகள் உங்களுக்குத்தான் வைத்திருக்கிறேன் என்று உங்களிடம் யார் வந்து சொன்னது??” என்று கேட்கிறார். இதனால் நந்தினி, ரேணுகா, ஜனனி என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இத்தனை நாட்களாக மருமகள்களின் பாதுகாப்பிற்காக தான் 40% பங்குகளை வைத்திருக்கிறார் என்று பலரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தற்போது புது குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் அப்பத்தா. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்