Categories: சமூகம்

டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து!!

வெளியிட்டது
டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து!! 1

வடக்கு டெல்லிக்கு அருகே உள்ள நரேலாவில் தொழிற்பேட்டை என்ற பகுதியில் ஒரு காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. திடீரென இன்று அதிகாலை அந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். சேத விவரங்கள் தெரியவில்லை. கடந்த 2 வாரங்களில் 3-வது முறையாக டெல்லியில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் வடக்கு டெல்லியில் அமைந்துள்ள ஜான்சிராணி சாலையில் உள்ள அனஜ் மண்டி என்ற பகுதியில் பகுதியில் இருந்த 4 மாடி கட்டிடம் ஒன்றில் கடந்த 8-ந்தேதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 43 பேர் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலியாகினர்.

மேலும், டெல்லியில் பிரேம்நகர் கிராரி பகுதியில் உள்ள ஜவுளி குடோனில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்