நடிகர் தனுஷ் இந்திய திரையுலகை தாண்டி தற்போது ஹாலிவுட்டில் களம் இறங்கி உள்ளார். அறிமுகமான படத்தில் மிக பெரிய கேலியும், கிண்டலும், அவுமானமும் பட்ட அவர் இன்று இந்திய சினிமா உலகிற்கே பெருமை சேர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். பல்வேறு தேசிய விருதுகளும், பாராட்டுகளும் வாங்கி குவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

இப்பொது உலகின் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படமான “அவென்ஜ்ர்ஸ்: எண்ட்கேம்” படத்தின் இயக்குனர்களான ரூஸ்ஸோ ப்ரதர்ஸ் இயக்கம் படத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவென்ஜ்ர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து உலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் கிரிஸ் எவன்ஸ் நடிப்பில் அவருடன் ரயன் கோஸ்லிங், அனா டீ அர்னாஸ் என 3 பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
நெட்பிளீக்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறைவான திரை அரங்குகளிலேயே அமெரிக்காவில் வெளியாக உள்ளது. ஒரே வாரம் அதாவது ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்பொது இந்த படம் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலரும் படத்தில் நடிகர் தனுஷின் காட்சிகள் குறைவாக உள்ளதால் கொஞ்சம் ஏமாந்து போயுள்ளார்கள். இருப்பினும் ரசிகர்கள் தனுஷ்காக மட்டுமே இப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம், படம் அருமையாக இருக்கின்றது. தனுஷின் அறிமுகம் மாஸாக இருக்கின்றது. வழக்கம் போல் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். தனுஷ் நன்றாக நடித்து இருக்கின்றார்.
படத்தில் சில நிமிடங்களில் மட்டுமே தனுஷ் வந்து செல்கின்றார். ஆனால் படம் பார்ப்பவர்களை குறிப்பாக இந்தியாவில் உள்ளவர்களை தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார். இந்தியா வந்திருந்த ரூஸோ பிரதர்ஸ் ஏற்கனவே சொன்னபடி அடுத்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்து இருக்கின்றனர் வெளிப்படையாக கூறாமல் அமைதியாக புலம்பி வருகிறார்கள்.