Categories: சினிமா

பிகில் ராயப்பன் சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற ரசிகர்கள்!

வெளியிட்டது
பிகில் ராயப்பன் சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற ரசிகர்கள்! 1

விஜய், நயன் தாரா ஆகியோர் சேர்ந்து ரோலில் நடித்துள்ள படம் பிகில். உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது . இந்த நிலையில், தமிழகத்தை விட அதிகமாக ரசிகர்களை உள்ள கேரளாவில், விஜய்க்கென்று சிலையை உருவாக்கி அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர் ரசிகர்கள்.

பிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல் மற்றும் பிகில் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில், ராயப்பன் ரோலுக்கு மிகவும் விஜய் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என கூறப்படுகிறது. ராயப்பன் மீன் வியாபாரியாக படத்தில் வலம் வருகிறார். இந்த நிலையில், தான் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்யை சிலையாக வடிவமைத்து கேரளா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விஜய் ரசிகர்கள் இவ்வாறு செய்வது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் கடந்த 2010 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சுறா படத்திலிருந்து இந்த கொண்டாட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சர்கார் படத்திற்கு சாதனை படைக்கும் அளவிற்கு அதிக அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர். கேரளாவில் சிலை என்றால், ஹைதராபாத்தில் 50 அடிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் ரசிகர்கள்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்