Categories: சினிமா

நடிகை சாய்பல்லவிக்கு எதிராக பொங்கும் கூட்டம்..! வெடித்த மிகப்பெரிய பிரச்சனை..! ட்ரெண்டிங்கில் நம்பர் 1..!

வெளியிட்டது

ப்ரேமம் படத்தில் நடித்து மலர் டீச்சராக இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சாய் பல்லவி. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. தற்போது இவர் தெலுங்கிலும் தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார். முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கும் சாய் பல்லவி அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக உள்ளார்.

நடிகை சாய்பல்லவிக்கு எதிராக பொங்கும் கூட்டம்..! வெடித்த மிகப்பெரிய பிரச்சனை..! ட்ரெண்டிங்கில் நம்பர் 1..! 1

தற்போது இவர் அமரன் படத்தில் நடித்து உள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். வருகிற 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர். இந்நிலையில் சாய்பல்லவிக்கு தற்போது மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் பேசிய நடிகை சாய் பல்லவி, காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்ததாகவும், அந்த படத்தில் பண்டிதர்கள் கொல்லப்பட்டதை காண்பித்தார்கள்,அதுபோல மாடு வைத்திருக்கும் இஸ்லாமியர்களையும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டு கொன்று இருந்தனர். நம் மதத்தின் மீது இருக்கும் பற்றால் அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது எனவும், பாகிஸ்தானை பொறுத்தவரை இந்திய ராணுவம் அவர்களுக்கு தீவிரவாதிகள் தான் என கூறி இருந்தார். இது சர்ச்சையாகிய நிலையில் அவர் மன்னிப்பும் கோரி இருந்தார். இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை வைரல் செய்து சாய்பல்லவிக்கு எதிராக பிரச்சனையை உருவாக்க உள்ளனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்