எல்லாருக்கும் Tata.! பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து கடைசி வீடியோவை வெளியிட்ட வெண்பா.!

வெளியிட்டது

பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதால் இந்த நாடகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரீனா தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை வெளியிட்ட அவர், பாட்டா சொல்வதற்கு முன்னால் பாரதி கண்ணம்மா சூட்டிங்கில் இருந்து யாரும் பார்க்காத சில புகைப்படங்களை இங்கு பதிவிடுவதாக கூறி புகைப்படங்களின் தொகுப்பை அழகிய வீடியோவாக பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா, இது மலையாளத்தில் எடுக்கப்பட்ட கருத்தமுத்து என்கிற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த தொடர் தற்போது மூன்று ஆண்டுகளைக் கடந்து முடிவடைய இருக்கிறது. இந்த நாடகத்தில் ஹீரோயினுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரீனாவிற்கும் ரசிகைகள் இருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் Tata.! பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் இருந்து கடைசி வீடியோவை வெளியிட்ட வெண்பா.! 1
கதைப்படி இந்த வில்லி வெண்பாதான் ஹீரோ பாரதிக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி அவரை இத்தனை நாட்களாக ஏமாற்றி வருகிறார். பாரதியின் குடும்பத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த வில்லி வெண்பா தான் இவரின் பேச்சை கேட்டுக் கொண்டுதான் பாரதி தனக்கு குழந்தை பிறக்காது என்று இத்தனை காலமாக நம்பிக்கொண்டிருக்கிறார். ஒரு வழியாக டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்த பின்பு கண்ணம்மாவிடம் வளரும் குழந்தைகள் ஆன லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் தன் குழந்தைகள் தான் என்பதை அறிந்து கொள்ளும் பாரதி தற்போது கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு குழந்தைகளுடன் மீண்டும் இணைந்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் இறுதி அத்தியாயங்களை நோக்கி என்கிற வசனங்களுடன் ப்ரோமோ வெளியிடப்பட்டது் இதனால் விரைவில் நாடகம் முடிவடைய உள்ளதாக தெரியவந்தது. தற்போது பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் மீண்டும் திருமணம் நடைபெற இருக்கிறது.


இந்த திருமணத்துடன் நாடகம் முடியும் என்று தெரிகிறது. மீண்டும் பாரதி கண்ணம்மா சீசன் 2 எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரீனா தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சீரியல் முடிய போவதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். டாட்டா சொல்வதற்கு முன்பு சில ஷூட்டிங் ஸ்பாட்டில் பலரும் பார்க்காத புகைப்படங்களை உங்களிடம் பகிர்கிறேன். உங்களுடைய விருப்பமான புகைப்படம் எது என்று கமெண்ட் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் அதற்கு கீழே அனைத்து புகைப்படங்களும் எங்களுக்கு விருப்பமான புகைப்படங்கள்தான் உங்களை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம் என்று ஃபரீனாவின் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்