அவசர கதியில் முடிந்த பாரதி கண்ணம்மா 2.! வேறு டிவிக்கு தாவிய முக்கிய நடிகை.! வீடியோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் அவசரகதியில் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த சீரியலின் நடிகை ஒருவர் வேறு டிவிக்கு மாறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாரதி கண்ணம்மா சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் பாரதி கண்ணம்மா சீசன் 2 துவங்கப்பட்டது. சுமார் 139 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பான இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய அடி வாங்கியது. இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் தொடங்க இருப்பதால் இந்த சீரியலை முடித்து எண்டு கார்டு போட சீரியல் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்த தகவல் பல நாட்களாக உலவி வந்த நிலையில் திடீரென இறுதி அத்தியாயங்களை நோக்கி என்கிற ப்ரோமோவுடன் உடன் சீரியலை முடித்து இருந்தனர் நாடகக் குழுவினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவசர கதியில் முடிந்த பாரதி கண்ணம்மா 2.! வேறு டிவிக்கு தாவிய முக்கிய நடிகை.! வீடியோ இதோ.! 1

150 எபிசோடுகளை கூட தாண்டாத நிலையில் நாடகத்தை இப்படி விரைவில் முடித்து விட்டனரே என்று சொல்லி ரசிகர்கள் பலரும் வேதனையில் இருந்தனர். இந்த நிலையில் சீசன் 1 மற்றும் சீசன் 2 இரண்டிலும் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஃபரீனா விஜய் டிவியில் இருந்து விலகி தற்போது ஜீ தமிழில் தொலைக்காட்சிக்கு சென்றிருக்கிறார். சீரியலில் நடிப்பதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் ஃபரீனா. இவர் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயினுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருந்தனரோ அதற்கு சரிசமமாக ரசிகர்களைப் பெற்றிருந்தார் ஃபரீனா. பாரதி கண்ணம்மா சீசன் 2 விலும் வெண்பா கதாபாத்திரத்திலேயே நடித்து அசத்தி வந்தார்.


இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக சீரியல் முடிக்கப்பட்டிருந்தது. ஃபரீனா அல்லது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வினுஷா தேவி இருவரில் ஒருவர் பிக் பாஸுக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஃபரீனா பிக் பாஸுக்கு செல்லவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோவான டக்கர் டக்கர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஆர் ஜே விஜயுடன் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார். இதனால் வினுஷா தேவி பிக் பாஸ்க்கு செல்லலாம் என்கிற தகவல் உலா வருகிறது. தற்போது ஃபரீனா தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Zee Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்