விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 யாரும் எதிர்பாராத விதமாக திடீரென முடிவடைந்த நிலையில் தற்போது அந்த சீரியலில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஃபரீனா தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி வேறு தொலைக்காட்சிக்கு சென்றிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சீரியல் முடிந்த கையோடு தற்போது அவர் வேறு தொலைக்காட்சிக்கு தாவி இருக்கும் செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடரின் சீசன் ஒன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் சீசன் 2 ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீசன் 1க்கு கிடைத்த அளவிற்கு இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. டிஆர்பி ரேட்டிங்கிலும் மிகப்பெரிய அடி வாங்கிய இந்த தொடரை நிறுத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்திருந்தது. மேலும் புது சீரியல்களின் வரவாலும் பிக் பாஸ் துவங்க இருப்பதாலும் சீரியலை முடித்து எண்டு கார்டு போடக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். சில நாட்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வாரத்துடன் இந்த சீரியலை முடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஃபரீனா தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று இருக்கிறார். அதை புதிய ப்ரோமோவுடன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஜீ தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோவான “டக்கர் டக்கர்” என்கிற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க இருக்கிறார். அவருடன் இணைந்து பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ஆர் ஜே விஜயையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Zee Tamil