தேசிய குற்றப் பதிவு பணியகம் கடந்த 2016 ஆம் ஆண்டிற்கான விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை நாடு முழுவதும் ஏற்பட்ட தற்கொலை, போக்குவரத்து, தீ மற்றும் கட்டிட சரிவு போன்ற விபத்துக்கள் குறித்த நாடு தழுவிய தரவுகளை வழங்குகிறது.

இந்த தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, சொந்த நிலத்தில் வெள்ளாமை செய்யும் விவசாயிகளின் தற்கொலை விகிதங்கள் 2016ஆம் ஆண்டு குறைந்துள்ளன. ஆனாலும் கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம் 2015ஆம் ஆண்டை விடவும் 2016ஆம் ஆண்டு அதிகரித்திருக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு 6,270 விவசாயிகளும், 5,109 விவசாய தொழிலாளர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு முறையே 8,007 மற்றும் 4,595ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், வேளாண் துறைக்காக 1.4 லட்ச கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 141 சதவிகிதங்கள் அதிகமானதாகும். ஆனால் தற்போது பரவி வரும் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள இந்த நிதி போதாது என்கிறது இந்தியா ஸ்பென்ட் அறிக்கை.
உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் வெட்பநிலை 3 முதல் 3.2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வேளாண் துறை மிக நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. குறிப்பாக குளிர்கால பருவத்தில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பால் 6.2 சதவிகிதம் அளவிற்கும், மழைக்காலத்தில் 6 சதவிகிதம் அளவிற்கும் விவசாயிகளின் வருமானத்தை பாதிப்படையை செய்கிறது.
சீரற்ற காலநிலையும், வானிலை மாற்றங்கள் போன்ற காரணத்தினால் பயிர் விளைச்சல் பாதிப்படைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 42 சதவிகிதங்கள் வரை வறட்சியை கண்டதாக அறிக்கை கூறுகிறது. குறிப்பாக ஆந்திரா, பீகார், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்கள், ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி சீரற்ற மழை காரணமாக கர்நாடகாவின் காவேரி படுக்கையில் சுமார் 25 சதவிகித குளிர்கால பயிர்கள் சேதமடைந்துள்ளன. மழை பெய்யும் அளவு குறைந்து போனதால் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் விதைக்கப்பட்ட வேண்டிய பயிர் விதைகளை ஆகஸ்ட் மாதம் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் கால் சதவிகித பயிர் நாசமானது என இண்டியாஸ்பென்ட் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.