Categories: அரசியல்

விவசாய கடன் தள்ளுபடி: உத்தவ்

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யபடும் என மஹாராஸ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டபேரவையில் பேசிய அவர் கூறியதாவது, “செப்டம்பர் மாதம் 30, 2019 வரை நிலுவையில் உள்ள பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டதின் உச்ச வரம்பு ரூ.2 லட்சம். இத்திட்டதின் பெயர் மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடி திட்டம்” எனவும் அறிவித்துள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி: உத்தவ் 1
உத்தவ் தாக்கரே

முதல்வராக பதவியேற்றவுடன், தாக்கரே விவசாயிகளுக்கு உறுதியான உதவியை அளிப்பதாக உறுதியளித்தார். மேலும், மகா விகாஸ் அகாடி கூட்டணி இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக கடன் தள்ளுபடி செய்ய உத்தரவாதம் அளித்திருந்தது.

இந்த திட்டம், 2020 மார்ச் முதல் செயல்படுத்தப்படும் என்றும் இந்த பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் எனவும் தாக்கரே கூறியுள்ளார். ;மேலும் இந்த தீர்மானம் நிறைவேற்றிய போது, பாஜகவினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்