அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே நன்னாரே பாட்டுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட கேபி.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேபி தற்போது நன்னாரே பாடலுக்கு ஐஸ்வர்யா ராய் போலவே நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 7-C என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திற்குள் அடி எடுத்து வைத்தவர் கேப்ரியல்லா. பின்னர் இவர் 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். ஒரு நடன நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். அதன் பின்னர் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே இவர் சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். விஜய் டிவியின் மிக முக்கியமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே நன்னாரே பாட்டுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட கேபி.! 1

பிக்பாஸில் கலந்து கொண்ட கேப்ரியல்லா மிக சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால் அவரை பொதுமக்கள் பாதியிலேயே வெளியேற்றினர். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நடிகர் சித்தார்த்திற்க்கு ஜோடியாக காவியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை பொறுத்தவரை ஆரம்பத்தில் காவியா சித்தார்த்தை கட்டாயம் காரணமாக திருமணம் செய்து கொள்வார். ஆனால் தற்போது சித்தார்த் மீது அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக காதல் வந்துள்ளது. சித்தார்த்தை அவர் ஏற்க தொடங்கி இருக்கிறார். இதனால் நாடகம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தனது புகைப்படங்கள் மற்றும் நடனமாடி அந்த வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் அவர் இன்று ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். தற்போது நன்னாரே பாடலுக்கு ஐஸ்வர்யா ராய் போலவே நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below Video..!

Youtube Video Code Embed Credits: Viral videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்