பார்த்தியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்ட கேபி.! ஈரமான ரோஜாவே செட்டில் செம்ம அலப்பறை செய்யும் கேபி

வெளியிட்டது

சீரியலில் எதிரும் புதிருமாக இருந்துவிட்டு தற்போது பார்த்தியுடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் கேபி. அந்த வீடியோவை அவரே தற்போது வெளியிட்டுள்ளார். விஜய் டிவியின் பிரபலங்கள் எது செய்தாலுமே அது வைரல் ஆகிவிடுவது வழக்கம். அந்த வகையில் கேபி நடனம் ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் கேப்ரியல்லா. பின்னர் இவருக்கு 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிது வளர்ந்த பின்னர் இவர் பல நடன போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று இருக்கிறார். இதில் சிறப்பாக நடனம் ஆடி பலரின் உள்ளங்களை கவர்ந்து இருந்தார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் பங்கேற்ற இவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பார்த்தியுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்ட கேபி.! ஈரமான ரோஜாவே செட்டில் செம்ம அலப்பறை செய்யும் கேபி 1

பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததால் பிக்பாஸ்-ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 4ல் ஒரு போட்டியாளராக களம் இறங்கினார் கேபி. இதில் இவர் சுரேஷ் சக்கரவர்த்தியின் தோள் மீது ஏறி நின்ற எபிசோடு மிக வைரலானது. மேலும் மக்களின் ஆதரவு இவருக்கு பெரிய அளவில் இல்லாததால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அங்கு இருந்தபோது இவருக்கும் சூப்பர் சிங்கர் ஆஜித்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலிப்பதாக வெளியில் கிசுகிசுக்கப்பட்டது. வெளியே வந்த பிறகு இருவரும் இணைந்து நடனமாடியும், டேட்டிங் சென்றும் வருகின்றனர். இந்த நிலையில் கேபிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகத்தில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் கேப்ரியல்லா.

சூட்டிங்கில் படு பிஸியாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். இந்த வீடியோக்களும் பல லட்சம் பார்வையாளர்களை அள்ளும். அந்த வகையில் தற்போது அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஈரமான ரோஜாவே சீரியலில் தன்னுடன் நடிக்கும் சித்தார்த் உடன் இணைந்து அவர் ஆடும் நடனத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த கதைப்படி தற்போது காவ்யாவும் பார்த்தியும் விவாகரத்துக்கு கோர்ட்டில் மனு செய்துள்ளனர். ஆனால் நீதி மன்றமோ நீங்கள் இருவரும் ஒரு வருடம் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த பின்பு சீரியலில் அப்படி சண்டை போட்டுகொண்டு இங்கு இப்படி ஆட்டம் போட்டு கொண்டுள்ளீர்களே என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்